25.7 C
Jaffna
January 17, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

8வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க, இன்று பிரதம நீதியரசரின் முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

பாராளுமன்ற வளாகத்தில் இந்த பதவிப்பிரமாணம் நடைபெற்றது.

பாராளுமன்றத்தை வந்தடைந்த அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பாராளுமன்றத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

பாராளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதை தொடர்ந்து ஏற்பட்ட ஜனாதிபதி பதவி வெற்றிடத்திற்கு, நேற்று (20) நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டினார்.

கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் மிக மோசமாக நிராகரிக்கப்பட்ட அவர், ராஜபக்ஷக்களின் பின்னணியில் ஜனாதிபதி பதவியை கைப்பற்ற முடிந்தது.

73 வயதான அவர் 1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். அவர் 1993 முதல் 1994, 2001 முதல் 2004, 2015 முதல் 2018, 2018 முதல் 2019, மற்றும் 2022 வரை ஆறு சந்தர்ப்பங்களில் இலங்கையின் பிரதமராக பணியாற்றினார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க 1994 முதல் 2001 வரை மற்றும் 2004 முதல் 2015 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.

1970 களின் நடுப்பகுதியில் ஐதேகவுடன் தீவிர அரசியலில் நுழைந்த அவர், 1977 பாராளுமன்றத் தேர்தலில் பியகம தொகுதியிலிருந்து முதன்முதலில் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெளிவிவகார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவர் இளைஞர் விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார், இலங்கையின் இளைய அமைச்சரவை அமைச்சரானார்.

2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மோசமாக தோல்வியடைந்தார். ஐ.தே.க ஒரு தொகுதியிலும் வெற்றியடைய வில்லை. ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது. அதன்மூலம், பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைந்த அவர் 2021 ஜூன் 23 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

மே 2022 இல், மக்கள் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடி, மாலைதீவில் தங்கியிருந்த போது,  13 ஜூலை 2022 அன்று ரணிலை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்தார்.

நேற்று (20) நாடாளுமன்றத்தில் நடந்த இரகசிய வாக்கெடுப்பில், ராஜபக்‌ஷக்கள் தரப்பு வேட்பாளராக களமிறக்கப்பட்டு, வெற்றியீட்டினார்.

8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அவர், இன்று முதல் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க தயார் எனவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் காயம்: உயிலங்குளம் இரட்டைக்கொலைக்கு பழிக்குப்பழியா?

Pagetamil

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

இலங்கையுடன் ஒத்துழைப்பை தொடர சீன ஜனாதிபதி உறுதி!

Pagetamil

Leave a Comment