27.6 C
Jaffna
August 19, 2022
தமிழ் சங்கதி

‘எனக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்’: தொலைபேசியில் கேட்ட அனுர!

புதிய ஜனாதிபதி தெரிவில் எனக்கு யாரும் வாக்களிக்காதீர்கள். வாக்கை பயனுள்ளதாக மாற்ற, ஏனைய இருவரில் ஒருவருக்கு வாக்களியுங்கள் என ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்ததை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

டலஸ் அழகப்பெருமவிற்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து, அநுரகுமார இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

நேற்று காலை நாடாளுமன்றத்தில் அனுரகுமாரவுடன் பேசிக்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலர், அநுரகுமாரவிற்கு வாக்களிக்கலாமென சூசகமாக குறிப்பிட்டிருந்தனர்.

இதன் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூடி, டலஸ் அழகப்பெருமவ ஆதரிக்க முடிவெடுத்தனர்.

இதை தொடர்ந்து, உடனடியாக குறிப்பிட்ட கூட்டமைப்பு எம்.பிக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனுர, தனக்கு வாக்களிக்காதீர்கள் என கேட்டுக் கொண்டார்.

தான் வெற்றி பெரும் வேட்பாளர்கள் பட்டியலில் இல்லாததால், வாக்கை வீணடிக்காமல், வெற்றி வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Related posts

இந்திய தூதரகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு; கூட்டமைப்பு டலசை ஆதரித்த காரணம்: ரணிலுக்கு தகவலை கொடுத்த தமிழ் அரசு கட்சி எம்.பி!

Pagetamil

ஜனாதிபதி- கூட்டமைப்பு சந்திப்பு எதிரொலி: அவசரமாக கூட்டமைப்பை தொடர்பு கொண்ட இராணுவத்தளபதி!

Pagetamil

ரெலோ பொதுக்குழு கூட்டம்: நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!