Pagetamil
இலங்கை

இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.

ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் கைப்பற்றிதை தொடர்ந்து, தப்பியோடி தலைமறைவாக உள்ள கோட்டாபய, நேற்று பதவிவிலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 9ஆம் திகதி மக்கள் புரட்சியையடுத்து தப்பியோடிய அவர், கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்றில் ஏறி, இலங்கை கடற்பரப்பிற்குள்ளே தலைமறைவாக இருந்துள்ளார்.

நேற்று தரைக்கு வந்த அவர் முப்படை தளபதிகளையும் சந்தித்து பேசிய பின்னர், இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாவின் பதவிவிலகலை நாளை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதகல் கடலில் இளைஞன் பலி

Pagetamil

பியூமியை பணமோசடி தடுப்பு சட்டத்தில் விசாரிக்க உத்தரவு!

Pagetamil

வெலிகம துப்பாக்கிச்சூடு: 6 சந்தேகநபர்களுக்கு பிணை!

Pagetamil

நில மோசடி விவகாரத்தில் மஹிந்த மனைவியும் விசாரணை வளையத்தில்

Pagetamil

சாப்பிட மறுத்த தென்னக்கோன்!

Pagetamil

Leave a Comment