TikTok காணொளித் தளத்தில் Blackout Challenge என்ற தன்னைத் தானே மூச்சுத்திணறச் செய்யும் சவாலில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் இறந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து கலிபோர்னியாவில் TikTok மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
“TikTok, ஆபத்தான உள்ளடக்கத்தைத் தூண்டும் தயாரிப்புகளை வேண்டுமென்றே வடிவமைக்க பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்துள்ளது மற்றும் அதன் பயனர்களின் மரணத்திற்கு வழிவகுக்கும்.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டெக்சஸில் 8 வயதுச் சிறுமியும் கடந்த ஆண்டு விஸ்கான்சினில் 9 வயதுச் சிறுமியும் இறந்ததைத் தொடந்து லொஸ் ஏஞ்சலிஸ் நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
TikTok மென்பொருள் இளம் சிறுவர்களைத் தூண்டியிருப்பதாகவும் அதனால் அவர்கள் உயிரிழந்ததாகவும் கருதும் சட்டத்தரணி ஒருவர், அவர்களின் மரணத்துக்கு TikTok பொறுப்பேற்கவேண்டும் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார்.
சீனாவின் ByteDance நிறுவனத்திற்குச் சொந்தமான TikTok, இது குறித்து உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
தொடுக்கப்பட்ட வழக்கில் இத்தாலி, அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் அந்தச் சவாலுடன் தொடர்புடைய சிறுவர்களின் மரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
“Skull Breaker Challenge”, “Coronavirus Challenge” மற்றும் “Fire Challenge” போன்ற தீங்கு விளைவிக்கும் சவால்களின் உதாரணங்களையும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.