இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதாக லங்கா இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டங்களை கருத்திற்கொண்டு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோக நடவடிக்கைகளை நிறுத்துமாறு லங்கா ஐஓசிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசியின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்தார்.
எவ்வாறாயினும், திருகோணமலையில் இருந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் எவ்வித இடையூறும் இன்றி விநியோகம் தொடர்வதாக குப்தா தெரிவித்தார்.
லங்கா ஐஓசி ஜூலை 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் விநியோகத்தை மீண்டும் தொடங்கும் என்று குப்தா கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1