துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தள்ளார்.
படுகாமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வ்ந்த அவர், உயிரிழந்து விட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஜப்பானின் நீண்ட காலம் தலைவராக இருந்த அபேக்கு வயது 67. ஜப்பான் நேரம் மாலை 5:03 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மேல்சபைத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கு நகரமான நாராவில் வீதியில் உரை ஆற்றிக்கொண்டிருந்தபோது சுமார் 11:30 மணியளவில் அபே சுடப்பட்டார். அவர் ஹெலிகொப்டர் மூலம் நாரா மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஏஜென்சியின் கூற்றுப்படி, அபேக்கு வலது கழுத்து, இடது மார்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருந்தது.
தாக்குதல் நடத்தியவர் உள்ளூர்வாசி டெட்சுயா யமகாமி என அடையாளம் காணப்பட்ட 41 வயதுடைய நபரை கைது செய்தனர்.
சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரி ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படையின் முன்னாள் உறுப்பினர் என்று ஜப்பானிய செய்தி நிறுவனமான கியோடோ செய்தி வெளியிட்டது.