தனது மறுமணம் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகை அமலா பால் பதில் அளித்துள்ளார்.
தமிழில் மைனா, வேட்டை, தலைவா, தெய்வத்திருமகள், வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அமலாபால் டைரக்டர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின்னர் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
தொடர்ந்து பிரபல பாடகர் பவிந்தர் சிங்கை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை பவிந்தர் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பின்னர் அதனை நீக்கினார்.
அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதாக பேசினர். ஆனால் திருமணம் நடக்கவில்லை என்று அமலாபால் தரப்பில் மறுக்கப்பட்டது. பவிந்தர் சிங் மீது வழக்கும் தொடரப்பட்டது.
இந்த நிலையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது அமலாபால் கலந்துரையாடியபோது ஒரு ரசிகர் உங்களை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து அமலாபால் கூறும்போது, ‘நிஜமாக சொல்ல வேண்டுமென்றால், அதை நானே இன்னும் கண்டுபிடிக்கவில்லை. என்னை அறிந்து கொள்ளும் பயணத்தில் நான் இருக்கிறேன். அதை கண்டுபிடித்த பிறகு உங்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.