கிழக்கு உக்ரைனில் உள்ள லிசிசான்ஸ்க் பகுதியை ரஷ்ய இராணுவம் ஜூலை 3ஆம் திகதி கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம், உக்ரைனின் கிழக்கிலுள்ள லுஹான்ஸ்க் மாகாணத்தை தனது படைகள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, லுஹான்ஸ்க் “விடுதலை” பெற்றதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தெரிவித்தார்.
லிசிசான்ஸ்க் வீழ்ந்ததை இதுவரை மறுத்து வந்த உக்ரைன், ஜூலை 3ஆம் திகதி மாலையில், முதன்முறையாக நகரம் வீழ்ச்சியடைந்தது என ஒப்புக் கொண்டது.
லிசிசான்ஸ்கில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக உக்ரைனிய இராணுவம் அறிவித்தது.
நேற்று இரவு நாட்டு மக்களிற்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மேற்கத்திய தந்திரோபாயங்கள் மற்றும் நவீன ஆயுதங்கள் கிடைத்ததும் லிசிசான்ஸ்கை உக்ரைன் மீள கைப்பற்றும் என தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1