24.9 C
Jaffna
January 29, 2023
முக்கியச் செய்திகள்

கரும்புலிகள் தினத்தில் குண்டு வெடிக்குமா?: மிரட்டல் கடிதத்தின் பின்னணியை வெளியிட கோருகிறார் அனுர!

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான கடிதம் குறித்து, ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பில் இன்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது கேள்வியெழுப்பினர்.

அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க,

ஜூலை 5  அல்லது 6 ஆம் திகதி ஆரம்பமாக விருக்கும் கரும்புலிகள் தினத்தை இலக்காக வைத்து, வடக்கில் அல்லது தெற்கில் குண்டு வெடிக்க வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை குறிப்பிட்டு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2022 ஜூன் 27 ஆம் திகதியன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு பொலிஸ் மா அதிபர் சி.ரி.விக்ரமரத்ன ​“வெடிகுண்டு மிரட்டல்” கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் செய்யப்பட்டதாக காரணங்களை காண்பிக்கும் வகையிலேயே அவை முன்னெடுக்கப்படவிருக்கின்றன என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஆகையால், தற்போதைக்கு யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரமுகர்கள் ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பொது வைபவங்களில் பங்கேற்க ​வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலின் ஆதாரத்தையும், அத்தகைய தாக்குதலின் சரியான தகவலையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். இதுபோன்ற தாக்குதல் குறித்த போலியான செய்திகளை சமூகமயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

இந்த கடிதத்தின்படி பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பிற அரசியல்வாதிகள் மீது ஜேவிபி மற்றும் பிற எதிர்க் குழுக்களால் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எடுத்துக்காட்டுகிறது.

இது ஒரு அபத்தமான கடிதம். அரசாங்கம் எப்பொழுதும் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்த முயல்கிறது.நாங்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருவதால், எங்களுக்கு எதிராக இதுபோன்ற பொய்யான செய்திகளை அரசாங்கம் பரப்புகிறது. எங்கள் தரப்பில், கடிதத்தில் உள்ள குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கிறோம்.

பொலிஸ் மா அதிபர் தனது அமைச்சின் செயலாளருக்குக் கூட கடிதத்தின் பிரதியை அனுப்பவில்லை என்றும், இது பொலிஸ் மா அதிபருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையிலான தனிப்பட்ட கடிதம் போன்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“எதிர்காலத்தில் மோசமாக்கக்கூடிய பொதுப் போராட்டத்திற்கு எதிர்வினையாற்ற அரசாங்கத்திற்குள் ஏதாவது திட்டம் உள்ளதா என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்,”

ஆகையால், அந்த வெளிநாட்டு புலனாய்வு ​சேவைக்கு எவ்வாறு தகவல்கள் கிடைத்தன. உபாயங்கள் என்ன? அதன் உண்மைத்தன்மை என்ன? என்பது தொடர்பில் மக்களுக்கும் நாட்டுக்கும் அரசாங்கம் தெளிவுப்படுத்தவேண்டும்.

இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டங்களை முடக்கும் வகையில் இவ்வாறான செய்திகள் தயாரிக்கப்பட்டனவா என்றும் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பினார்.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 5 சிவில் பாதுகாப்பு படை வீரர்களை பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அனுரகுமார திஸாநாயக்க, பாரிய பின்விளைவுகளை உருவாக்கக்கூடிய இத்தகைய நகர்வுகளை அரசாங்கம் கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

பெரமுன பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது சில பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட பாதுகாப்பை கோரியுள்ளதாகவும் மேலும் ஐந்து ஆயுதமேந்திய சிவில் பாதுகாப்பு படை வீரர்களை விசேட பயிற்சியுடன் நியமிக்க இணங்கப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் விருப்பப்படி அந்தந்த எம்.பி.க்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப இந்த துணை இராணுவம் செயற்படக் கூடிய ஒரு பாரதூரமான நிலைமை இதுவாகும்.

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்குமானால், அதற்கான அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்!

Pagetamil

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழ் அரசு கட்சி இனி இணைந்தாலும் சின்னம் குத்துவிளக்கே!

Pagetamil

இலங்கைக்கு சீனா வழங்கிய 2 வருட அவகாசம் சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை!

Pagetamil

இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றத்தில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி!

Pagetamil

சர்வகட்சி கூட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்கிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!