தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்க் விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று மாலை தெல்லிப்பழை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவத் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி பகுதியில் உள்ள கடை ஒன்றில் டீசலை பதுக்கி விற்பனை செய்வதாக தெல்லிப்பழை பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிசார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது 291 லீற்றர் டீசல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பன தெல்லிப்பழை பொலிசாரால் கைப்பற்றப்பட்டதோடு டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய கடை உரிமையாளரை தெல்லிப்பழை பொலிசார் கைது செய்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1