திருகோணமலை கடற்பரப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று அதிகாலை திருகோணமலை அலர்த்தோட்டம் கடற்பரப்பிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் கடற்பரப்பில் வைத்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட வேளையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுீ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
41 ஆண்களும் 5பெண்கள் உட்பட ஐந்து சிறுவர்கள் அடங்கலாக 51 பேர் கைது செய்யப்பட்டு திருகோணமலை கடற்படை முகாமிற்கு விசாரணைகளுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடற் படையினரின் விசாரணைகளுக்கு பின்னர் திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
–ரவ்பீக் பாயிஸ்-