29.5 C
Jaffna
March 28, 2024
இந்தியா

400 ஆபாச வீடியோக்கள்… 1,900 நிர்வாண புகைப்படங்கள்… 120 மாணவிகள்: காசியின் திருவிளையாடல்கள்!

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை வலையில் வீழ்த்தி நெருக்கமாக இருந்து, அதை வீடியோவாக எடுத்து மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற சுஜி கடந்த 2020-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டரை காதலித்து, திருமணம் செய்வதாக ஏமாற்றி நெருக்கமாக இருந்திருக்கிறார் காசி. தனிமையில் இருக்கும் வீடியோவை எடுத்து வைத்து, பணம் கேட்டு மிரட்டியதுடன், அவரது ஆபாசப் படங்களை இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்தார் காசி.

இதுபற்றி பெண் டாக்டர் கொடுத்த புகாரை அடுத்தே காசியின் லீலைகள் வெளிச்சத்துக்கு வந்தன. இளம்பெண்கள், திருமணமான பெண்கள், சிறுமிகள் எனக் காசியால் ஆசைகாட்டியும், அச்சுறுத்தியும் சீரழிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை நூறுக்கும் மேல். ஆரம்பத்தில் இந்த வழக்கை கோட்டாறு போலீஸார் விசாரித்தனர். பின்னர் போக்சோ வழக்கு, வெளிமாநில பெண்கள் ஏமாற்றப்பட்டது, கந்துவட்டி புகார் என வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து… காசி வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி காசியின் ஆப்பிள் போன், லேப்டாப் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து ஆய்வுசெய்தனர்.

லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் இருந்த ஆபாச வீடியோக்கள், பெண்களிடம் நெருக்கமாக இருந்த வீடியோக்கள், போட்டோக்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காசி உல்லாசமாக இருக்கும்போது பெண்களை மிரட்டி வீடியோ, போட்டோ எடுத்து லேப்டாப்பில் சேமித்து வைத்திருக்கிறான். அந்த வீடியோ ஆதாரங்களைக் காசி கைதுசெய்யப்பட்ட பிறகு அவர் தந்தை தங்கபாண்டியன் லேப்டாப், மொபைல் போன் ஆகியவற்றிலிருந்து வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை டெலிட் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தந்தை தங்கபாண்டியன்

ஆதாரங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டார். இப்போது காசியும், அவர் தந்தை தங்கபாண்டியனும் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், ஜாமீன் கேட்டு தங்கபாண்டியன் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணையின்போது காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், தங்கபாண்டியனின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நீதிபதி புகழேந்தி முன்னிலையில் நடைபெற்றது. காசியின் வீட்டிலிருந்து ஆப்பிள் மொபைல் போனும், அவர் பயன்படுத்திய லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்… பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தபோது 400 ஆபாச வீடியோக்கள், 1,900 நிர்வாண படங்கள் இருந்ததாகவும்… காசி சுமார் 120 மாணவிகளை ஆசை வார்த்தைக் கூறியும், மிரட்டியும் பாலியல் தொல்லை கொடுத்ததாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளதாகவும், இன்னும் பல சாட்சிகளை போலீஸ் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி தரப்பில் கூறப்பட்டது. அதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி புகழேந்தி காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment