27.6 C
Jaffna
August 19, 2022
குற்றம்

டீசல் பதுக்கி வைத்த சிற்றி ஹாட்வெயார் சிக்கியது!

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல் விசேட சோதனை நடவடிக்கையின் போது இன்று (27) மதியம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து நெளுக்குளம் பொலிசார் வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹாட்வெயார் ஒன்றினை சோதனை செய்தனர். இதன்போது குறித்த ஹாட்வெயாரின் களஞ்சியசாலைப் பகுதியில் 15 பரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த 15 பரல்களில் காணப்பட்ட 3000 லீற்றர் டீசல்களும் நெளுக்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஹாட்வெயாரின் களஞ்சிய பகுதியில் கடமையாற்றும் 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்னள நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Related posts

யாழில் கலப்பட மதுபானம் உற்பத்தி செய்து விநியோகித்த கில்லாடி சிக்கினார்!

Pagetamil

சாரதியை கொன்று முச்சக்கர வண்டியை திருடியவர் கைது!

Pagetamil

நீர்வீழ்ச்சியில் ஆபாசப்படம் எடுத்த இளைஞனுக்கு கொரோனா: யுவதிக்கும் பிணை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!