28.1 C
Jaffna
June 27, 2022
ஆன்மிகம்

இந்தவார ராசி பலன் (24.6.2022 – 30.6.2022)

சூரியன், சுக்கிரன், புதன், நன்மையை வழங்குவர். மகாலட்சுமியை வழிபடுங்கள்.

அசுவினி: முதல் இரண்டு நாட்களும் மகிழ்ச்சியாக செல்லும். ஞாயிறு திங்களில் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் முதல் உங்கள் செயல்களில் வேகமும் லாபமும் உண்டாகும்.

பரணி: உங்களுடைய எண்ணங்கள் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். எதிர்பாலினரின் தொந்தரவுகளுக்கு ஆளாவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

கார்த்திகை 1ம் பாதம்: தள்ளி வைத்த முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். வாரத்தின் பிற்பகுதியில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய நட்புகளிடம் அதிகமான நெருக்கம் வேண்டாம். யோகமான வாரம்

குரு, செவ்வாய், சுக்கிரன், கேது, நன்மைகளை வழங்குவர். குருபகவானை மனதில் நினைத்து வழிபட்டு வர உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

கார்த்திகை 2, 3, 4: வெள்ளி, சனியில் செலவுகள் அதிகரிக்கும். செயல்களில் சிரமம் இருக்கும். ஞாயிறு, திங்களில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். செவ்வாய் முதல் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். செலவுகளுக்கேற்ற வருமானம் வந்து சேரும்.

ரோகிணி: முதல் இரண்டு நாட்கள் எதிர்பாராத செலவுகளும் அலைச்சலும் ஏற்படும். அதன்பின் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும். வாரத்தின் பிற்பகுதியில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் குறித்து திட்டமிடுவீர்கள்.

மிருகசீரிடம் 1, 2: உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம் இது. குடும்பத்திற்காக சுபச்செலவுகள் ஏற்படும் என்றாலும் அதற்கேற்ற வரவுகளும் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.

சுக்கிரன், ராகு, செவ்வாய் நன்மைகளை வழங்குவர். திருச்செந்துார் முருகனை மனதில் எண்ணி வழிபட்டு வர சங்கடங்கள் விலகும்.

மிருகசீரிடம் 3, 4: வருமானம் அதிகரிக்கும். நினைத்ததை அடைவீர்கள். ஞாயிறு திங்களில் செலவுகள் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். செவ்வாய் முதல் உங்கள் மனம் மகிழும்படியான நிலை உண்டாகும்.

திருவாதிரை: உங்களுடைய நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய முயற்சிகள் நிறைவேறும். வாரத்தின் முற்பகுதியில் எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். திட்டமிட்ட செயல்கள் நிறைவேறும். உங்கள் முயற்சிகள் நன்மையளிக்கும்.

புனர்பூசம் 1, 2, 3: உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். வெள்ளி, சனியில் வரவுகள் அதிகரிக்கும். ஞாயிறு மகிழ்ச்சியாக செல்லும். திங்கள் முதல் ராகுவால் வருமானம் அதிகரிக்கும். அந்நிய மனிதர்கள் உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவி புரிவார்கள். யோகமான வாரம்.

குரு, சந்திரன், புதன் நன்மைகளை வழங்குவார்கள். குல தெய்வ வழிபாடு நன்மையாகும்.

புனர்பூசம் 4: வாரத்தின் முற்பகுதியில் செல்வாக்கு உயரும். தொழில், உத்தியோகத்தில் ஆதாயமான நிலை உருவாகும். பணவரவு அதிகரிக்கும். செவ்வாய் முதல் செலவு அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படும். குடும்பத்தினரின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவீர்கள்.

பூசம்: உங்களுடைய எண்ணங்கள் வாரத்தின் முற்பகுதியில் எளிதாக நிறைவேறும். நீங்கள் ஈடுபடும் செயல்களில் சாதகமான நிலை ஏற்படும். உங்களின் வாதத்திறமையால் செல்வாக்கு உயரும். சுபச்செலவு உண்டாகும். உறவினர்கள் ஆதரவு உங்களை முன்னேற்றும்.

ஆயில்யம்: வெள்ளி முதல் திங்கள் வரை முயற்சிகள் கை கூடும். வரவுகள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். செவ்வாய் முதல் குடும்பத்தினர் வழியில் கூடுதல் செலவுகளை சந்திக்க வேண்டி வரும்.

சூரியன், புதன், கேது நன்மை வழங்குவார்கள். சூரிய வழிபாடு உங்கள் நிலையை உயர்த்தும்.

மகம்: இந்த வாரம் நினைத்ததை சாதிக்கும் வாரமாகும். உங்கள் முயற்சிகளில் நீங்கள் மேற்கொள்ளும் அளவிற்கு நன்மைகளை அடைவீர்கள். தொழிலில் இருந்த தடை விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.

பூரம்: செல்வாக்கு உயரும். உங்களுடைய முயற்சியில் இருந்த தடைகள் விலகி ஆதாயம் கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.

உத்திரம் 1: சூரியனைக் கண்ட பனிபோல் சங்கடங்கள் விலகும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். முதல் இரண்டு நாட்கள் சுமாராக சென்றாலும் அதன்பின் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும்.

குரு, சுக்கிரன், சூரியன் உங்கள் நிலையை உயர்த்துவர். வேங்கடவனை வழிபட வினைகள் தீரும்.

உத்திரம் 2, 3, 4: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் உங்கள் செயல்களில் சங்கடமும் நெருக்கடியும் இருக்கும். அதன்பின் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு திருமணம், புதிய வீட்டுக்கு குடி போகுதல் என்ற எண்ணங்கள் நிறைவேறும். யோகமான வாரம்.

அஸ்தம்: வெள்ளி, சனியில் சந்திராஷ்டமம் என்பதால் முயற்சிகள் இழுபறியாகும். அலைச்சல் அதிகரிக்கும். மனதில் சிரமம் தோன்றும். அதன்பின் குருவருளால் எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.

சித்திரை 1, 2: வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் நிதானம் அவசியம். புதிய முயற்சி வேண்டாம். அதன் பிறகு உங்களுடைய அணுகுமுறையால் எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.

சந்திராஷ்டமம்:

23.6.2022 காலை 11.03 மணி – 25.6.2022 இரவு 7.51 மணி

செவ்வாய், புதன் நன்மை வழங்குவர். துர்கையை மனதில் நினைத்து செயல்பட்டுவர நெருக்கடி விலகும்.

சித்திரை 3, 4: முயற்சிகளில் வெற்றி உண்டாகும். மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். ஞாயிறு, திங்களில் எதிர்பாராத நெருக்கடி வரலாம். செவ்வாய் முதல் ஆதாயம் அடைவீர்கள்.

சுவாதி: எண்ணம் நிறைவேறும். நட்புகளால் மகிழ்வீர்கள். ஞாயிறு, திங்களில் கவனமும் எச்சரிக்கையும் தேவைப்படும் அதன்பின் முயற்சிக்கேற்ப ஆதாயம் உண்டாகும். உத்தியோகம், தொழில் சுமாராக செல்லும்.

விசாகம் 1, 2, 3: வெள்ளி, சனியில் விருப்பங்கள் நிறைவேறும். ஞாயிறு, திங்களில் நிதானத்துடன் யோசித்து செயல்படுவது நல்லது. செவ்வாய் முதல் எதிர்பார்த்த வருவாய் வரும். சிரமங்கள் விலகும்.

சந்திராஷ்டமம்: 25.6.2022 இரவு 7.52 மணி – 28.6.2022 காலை 6.43 மணி

குரு, ராகு, புதன், செவ்வாய் நன்மை வழங்குவர். குருபகவானை வழிபட நன்மை அதிகரிக்கும்.

விசாகம் 4: வெள்ளி முதல் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சுபச்செலவுகள் ஏற்படும். வீடு மனை வாங்குவீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வருவாய் திருப்தி தரும். செவ்வாய் முதல் கவனமாக செயல்படவும்.

அனுஷம்: குருவருளால் முயற்சிகள் அனுகூலமாகும். திருமண வயதினருக்கு நல்ல வரன் தேடி வரும். வேலை வாய்ப்புக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். செவ்வாய், புதனன்று மட்டும் நிதானித்து செயல்படுங்கள்.

கேட்டை: எண்ணங்கள் நிறைவேறும் வாரம் இது. திட்டமிட்டிருந்த செயல்களில் அனுகூலம் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். சிலர் வீடு, மனை வாங்குவீர்கள். செவ்வாய், புதனன்று தடை, தாமதம் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: 28.6.2022 காலை 6.44 மணி – 30.6.2022 மாலை 6.26 மணி

புதன், கேது, சந்திரன் நன்மை வழங்குவர். நரசிம்மரை வழிபடுங்கள்.

மூலம்: எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். மனக்குழப்பம் விலகி தெளிவடைவீர்கள். சிலருக்கு இட, பணிமாற்றம் ஏற்படும். தொழிலில் லாபம் காண்பீர்கள்.

பூராடம்: முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மற்றவர் மீது நம்பிக்கை இல்லாமல் உங்கள் செயல்களில் நீங்களே நேரடியாக ஈடுபடுவீர்கள். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திராடம் 1: தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வந்த உங்களுக்கு இந்த வாரம் யோகமான வாரம். திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும். தொழிலை விரிவு செய்வீர்கள்.

சந்திராஷ்டமம்: 30.6.2022 மாலை 6.27 மணி – 1.7.2022 நாள் முழுவதும்

சூரியன், சுக்கிரன் நன்மை வழங்குவார்கள். சிவனை மனதார வழிபடுங்கள்.

உத்திராடம் 2, 3, 4: முயற்சிகள் இழுபறியாகவே இருக்கும். செவ்வாய் முதல் உங்கள் நிலையில் மாறுதல் தோன்றும். நினைத்ததை சாதிப்பீர்கள். விரும்பியதை அடைவீர்கள். எதிரி தொல்லை விலகும்.

திருவோணம்: வாரத்தின் முதல் நான்கு நாட்களும் அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி தாமதமாகும். உத்தியோகம், தொழிலில் எதிர்பார்த்த நன்மைகளை அடைய முடியாமல் போகும். செவ்வாய் முதல் உங்கள் செயல்களில் லாபநிலை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.

அவிட்டம் 1, 2: நீண்ட நாள் எண்ணங்களைப் போராடி நிறைவேற்றிக் கொள்வீர்கள். விலகிச் சென்ற உறவுகள் தேடி வருவார்கள். தொழிலில் இருந்த மந்த நிலை அகலும். முன்னோர் ஆசீர்வாதம் கிடைத்து முயற்சிகள் நிறைவேறும்.

அவிட்டம் 3, 4: வெள்ளி சனியில் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். ஞாயிறு, திங்களில் விருப்பம் நிறைவேறும். செவ்வாய் முதல் பொறுப்பு அதிகரிக்கும் உங்களை வெறுத்தவர்களும் பாராட்டுவார்கள்.

சதயம்: முதல் இரண்டு நாட்களும் முயற்சிகளில் நன்மை உண்டாகும். நினைத்ததை சாதிப்பீர்கள். ஞாயிறு முதல் மனம் மகிழும்படியான சம்பவம் நடந்தேறும். செவ்வாய் முதல் பூர்வீக சொத்துகள் குறித்த உங்கள் முயற்சி கைகொடுக்கும்.

பூரட்டாதி 1, 2, 3: ஆதாயம் காண்பீர்கள். நீண்டநாள் எண்ணம் நிறைவேறத் தொடங்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும். திருமண வயதினருக்கு நல்ல வரனும், வேலைக்காக காத்திருப்பவருக்கு நல்ல வேலையும் அமையும்.

சுக்கிரன், சந்திரன் நன்மை வழங்குவர். திங்களூர் சந்திரனை வழிபட குழப்பம் தீரும்.

பூரட்டாதி 4: செலவு அதிகரிக்கும் பணம், பொருள்களைக் கையாள்வதில் கவனம் தேவை. ஞாயிறு முதல் உங்கள் செயல்களில் லாப நிலை இருக்கும். நிதி நிலை உயரும்.

உத்திரட்டாதி: எண்ணம் நிறைவேறும். பேச்சில் கவனம் தேவை. இல்லையெனில் சங்கடம் வரலாம். ஞாயிறு முதல் உங்களுடைய அணுகுமுறை மாறும். லாப நிலை உண்டாகும்.

ரேவதி: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும். நண்பர்களின் உதவியுடன் வெற்றி காண்பீர்கள். ஞாயிறு முதல் விருப்பம் நிறைவேறும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
4
+1
3
+1
0
+1
0
+1
0

Related posts

இன்றைய ராசிபலன் (17 மே 2021)

divya divya

கடக ராசியினர் செய்ய வேண்டிய பொதுவான பரிகாரங்கள்..

divya divya

தமிழ்ப் புத்தாண்டு பிலவ வருட ராசி பலன்கள்: மிதுன ராசி வாசகர்களே (14.04.2021 முதல் 13.04.2022 வரை)

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!