29.7 C
Jaffna
June 28, 2022
கிழக்கு

திருமலையில் அரசுக்கு எதிராக தீப்பந்த போராட்டம்!

திருகோணமலையில் அரசாங்கத்துக்கு எதிராக மின் தடைக்கு மத்தியில் தீப்பந்தம் ஏற்றி பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் திருகோணமலை அனுராதபுர சந்தியில் நேற்று (22) இடம்பெற்ற குறித்த தீப்பந்த போராட்டம் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் 74 வருட சாபத்தை இல்லாதொழிப்போம் எனும் தொனிப்பொருளில் ஆரம்பமானது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மக்களை வாட்டி வதைக்கும் கோட்டா, ரணில் ஆட்சியை விரட்டியடிப்போம், மக்கள் நல ஆட்சியை கட்டியமைப்போம், வாருங்கள் மக்களே அநீதிக்கு எதிராக அணிதிரள்வோம் வாருங்கள், என்ற பதாதைகளை ஏந்தியவாறும் நாட்டின் தேசிய சொத்துக்கள் விற்பனை செய்வதை தடுக்குமாறு கோஷமிட்டு தீப்பந்தம் ஏற்றி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

நாட்டில் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய நீண்ட வரிசைகளில் காத்திருந்து சிரமப் படுவதையும், வைத்தியசாலைகளில் மருத்துவ உபகரணங்களுக்கு நிலவும் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்த முடியாமல் அரசு தள்ளாடிக் கொண்டு இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது இந்நிலை தோல்வியடைந்த அரசாங்கத்தின் பிழையான முடிவுகளால் ஏற்பட்ட நிலையே தவிர வேறு எதுவுமில்லை என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

மேலும் நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் வெறுமனே ஆட்சியாளர்களை மட்டும் மாற்றி ஜனாதிபதி தனது பதவியினை தக்க வைத்திருப்பது வேடிக்கையான விடயம் எனவும் இவ்வாறு பசில் ராஜபக்ஷ அவர்கள் நிதியமைச்சு பதவியை ஏற்கும் போது ஏழு மூளை கொண்ட ஒருவர் நாட்டை கட்டியெழுப்புவார் என கனவு காணப்பட்டது அதுவும் ஆட்சியாளர்களினால் முடியாமல் போனது பின்னர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமர் பிரதமர் பதவியில் அமர்த்தி தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள திட்டம் தீட்டினர் இருப்பினும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்க அவர்களினால் நாட்டிற்கு குறைந்தது 600 மில்லியன் டொலரை கூட கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது இதற்குப் பின்னால் சுயநலமிக்க ஒரு தொழிலதிபர் தம்மிக பெரேரா அவர்களை தற்போது பாராளுமன்றத்திற்கு அழைத்து நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றனர் இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் போலியானவை என மக்கள் உணர்ந்து விட்டதை மறந்து செயற்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உடன் பதவி விலகி நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் அரசாங்கம் அறிவித்தது போன்று தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது நீங்கள் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதில் பயன் ஏதும் கிட்டுமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர இவ்வாறு பதிலளித்தார்.

இந்த ஆட்சியாளர்களுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் உலகளாவிய ரீதியில் தேர்தல் ஒன்று உள்ளது உடன் கடுகதி தேர்தல் என்ற முறைமை மூலம் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பது என்பது வெறும் சாதாரண விடயம் மாத்திரமே அதுமாத்திரமன்றி நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பல தொழிற்சங்கங்கள் மேலதிக கொடுப்பனவுகள் இன்றி தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ள நிலையில் தேர்தல் ஒன்றை முகம் கொடுப்பதற்கு பசில் ராஜபக்ஷ அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு லட்சம் வேலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி இருக்கின்ற நிலையில் தேர்தல் ஒன்றை நடாத்துவது மூலம் நாடு பாரிய செலவினத்தை எதிர்நோக்கும் என்ற விடயம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

தேர்தல் ஒன்றக்கு முகம் கொடுக்க முடியாமல் ஆட்சியாளர்கள் தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக நடத்தும் வெறும் நாடகம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் சந்திரன் தெரிவித்தார்.

ரவ்பீக் பாயிஸ் –

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது!

Pagetamil

பேத்திக்கு கல்லெறிந்த முதியவர்: பயத்தில் எடுத்த விபரீத முடிவு!

Pagetamil

உணவகங்களில் தீவிர கண்காணிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!