படகொட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் பெறுவதற்காக 5 நாட்களாக காத்திருந்த டிப்பர் சாரதி ஒருவர் வாகனத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அஹங்கம, சங்கரத்ன மாவத்தையைச் சேர்ந்த 63 வயதுடைய வீரப்புலி சுனில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஐந்து நாட்களாக டீசலை எதிர்பார்த்து டிப்பர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், டிப்பருக்குள் அவர் இறந்து கிடப்பதைக் கண்ட ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1