சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தாம் வகிக்கும் பதவிகளில் இருந்து தன்னை நீக்கியமை தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு எதிராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்திருந்த வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்ள இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்ததையடுத்து, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பதவியில் இருந்து நீக்கிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் முடிவின் மீதான தடையை நீதிபதி நீக்கினார்.
கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக அமைச்சுப் பதவியை வகித்தமைக்காக அமைச்சர் டி சில்வாவை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தது.
இதன்படி அமைச்சர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரி மனுவொன்றை தாக்கல் செய்தார்.