மீகஹதென்ன, பெலவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் போதையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
37, 38 மற்றும் 40 வயதுடைய சந்தேகநபர்கள் பஹலஹெவெஸ்ஸ மற்றும் பெலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் மீகஹதென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நிக்கவெரட்டிய, மாகல்லேகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொழிலாளி ஒருவரை அச்சுறுத்தி வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நிக்கவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.