25.9 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இந்தியா

விஜயகாந்தின் காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டது!

நீரிழிவு நோயால் தொடர்ந்து அவதியுற்று வந்த விஜயகாந்தின் 3 கால் விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.

தே.மு.தி.க. தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில், கடந்த 14ஆம் திகதி மீண்டும் பரிசோதனைக்காக விஜயகாந்த் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு கடந்த 16ஆம் திகதி அவர் வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய நிலையில், விஜயகாந்தின் வலது கால் விரல்கள் பகுதியில் இரத்த ஓட்டம் சீராக இல்லாதது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் வைத்தியசாலையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீண்ட காலமாக நீரிழிவு நோய் இருந்து வந்ததால், வலது கால் விரல்கள் பகுதியில் ,ரத்த ஓட்டம் சீராக இல்லாமலிருந்தது.

அதனைத்தொடர்ந்து, வலது காலில் கட்டை விரல் உள்பட 3 விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

தற்போது வைத்தியசாலையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் டாக்டர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. தற்போது உடல் நலம் சீராகி வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து பரவும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் – திருவண்ணாமலையில் ‘அரோகரா’ முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம்

Pagetamil

48 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

Pagetamil

உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுன் கைது: பெண் ரசிகை உயிரிழந்த சம்பவத்தில் நடவடிக்கை

Pagetamil

சூப்பர் ஸ்டாருக்கு 300 கிலோ எடையில் மூன்றரை அடி உயர கருங்கல் சிலை

east pagetamil

Leave a Comment