முக்கியச் செய்திகள்

பிணை முறி கட்டணங்களை செலுத்தாததால் இலங்கை மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

பிணை முறிகளுக்கான கட்டணங்களை இலங்கை செலுத்த தவறியதற்காக, பிணைமுறி பதிவுதாரர் ஒருவரால் இலங்கை மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

ஹாமில்டன் ரிசர்வ் வங்கி லிமிடெட், இலங்கையின் 5.875% சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களில் 250 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை ஜூலை 25ஆம் திகதிக்கு வைத்திருக்கும்.

அந்த நிறுவன உரிமையாளரே அசல் மற்றும் வட்டி முழுவதையும் செலுத்தக் கோரி நியூயோர்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குத் தாக்கல் செய்தது.

1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை முதன்முறையாக, இறையாண்மைக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலுள்ளதாக மே மாதத்தில் அறிவித்து, கடன் மறுசீரமைப்பை அறிவித்தது.

“இதன் விளைவாக, இந்த விருப்பமான இலங்கைத் தரப்புக்களுக்கு அசல் மற்றும் வட்டி முழுவதுமாக வழங்கப்படும், அதே நேரத்தில் அமெரிக்க ஓய்வூதிய அமைப்புகளால் பரவலாக நடத்தப்படும் கடன் பத்திரங்களில் பாதிப்பு ஏற்பட்டு,  அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும்  அமெரிக்க ஓய்வு பெற்றவர்கள் தங்களது அசல் முதலீட்டு மதிப்பில் 80% வரை பாரிய இழப்புகளால் பாதிக்கப்படுகின்றனர்” என்று ஹாமில்டன் ரிசர்வ் வழக்கறிஞர்கள் தங்கள் புகாரில் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒடிசா ரயில் விபத்தில் 261 பேர் பலி: மீட்புப் பணிகள் நிறைவு!

Pagetamil

இந்தியாவில் ரயில் விபத்து: உயிரிழப்பு 207 ஆக அதிகரிப்பு; 900க்கு மேற்பட்டோர் காயம்

Pagetamil

கஜேந்திரகுமார் எம்.பியை துப்பாக்கியால் சுட முயற்சியா?: இன்று மருதங்கேணியில் நடந்தது என்ன?

Pagetamil

நாட்டை விற்கப்போகிறார்கள் என்ற தவறான பிரச்சாரமாம்: ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றிய உரை; ஊழல் குறித்தும் மெத்தனம்!

Pagetamil

நான் ‘இடும் சாதி’; கொழும்பில் வளர்ந்தால் சாதி பற்றி அறிந்திருக்கவில்லை: விக்னேஸ்வரன் பகிரங்க விளக்கம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!