அரச வர்த்தக சம்மேளனத்தினால் லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 300,000 கிலோ அரிசி ஹொரவ்பதானையில் உள்ள ஆலைக்கு கடத்தப்பட்டு உள்ளூர் அரிசியாக சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லங்கா சதொச 300,000 கிலோ அரிசிக்காக அரச வர்த்தக சம்மேளனத்திற்கு பணம் செலுத்தியுள்ளதாகவும் ஆனால் அரிசி இருப்பு உண்மையில் அதன் களஞ்சியசாலைகளுக்கு சென்றடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச நிறுவனத்திற்கு சுமார் 60 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக லங்கா சதொச வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
குறித்த அரிசி ஹொரவ்பத்தனையில் உள்ள அரிசி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவை மீள் பொதி செய்யப்பட்டு உள்ளூர் அரிசியாக அதிக விலைக்கு சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச வர்த்தக சம்மேளனத்தின் அரிசி இறக்குமதி திட்டத்திற்கு பொறுப்பான இரண்டு முகாமையாளர்கள் மற்றும் லங்கா சதொச களஞ்சிய முகாமையாளர் ஆகியோர் இணைந்து இந்த அரிசி மோசடியை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.