இஸ்ரேலில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான சட்டமூலத்தை அடுத்த வாரம் சமர்பிப்பதாக இஸ்ரேலின்ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நான்கு ஆண்டுகளுக்குள் ஐந்தாவது தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.
புதிய தேர்தல்கள் நடைபெறும் வரை இடைக்காலப் பிரதமராக Yair Lapid பதவியேற்பார் என்பதைக் குறிக்கும் அறிக்கைகளுடன் இந்த சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
“எங்களுக்கு இடையேயான உடன்படிக்கையின்படி விரைவில் பிரதமராக பதவியேற்கவுள்ள எனது நண்பர் யாயர் லாபிடுடன் நான் இங்கு நிற்கிறேன்.” என பிரதமர்
பென்னட் கூறினார்.
ஒக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என இஸ்ரேல் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அடுத்த மாதம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் சமீபத்திய அரசியல் முன்னேற்றம் வந்துள்ளது.
இஸ்ரேலின் முன்னாள் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவை வெளியேற்றிய பிரதம மந்திரி நஃப்தலி பென்னட்டின் ஆளும் கூட்டணி இஸ்ரேலின் பாராளுமன்ற நெசெட்டில் பெரும்பான்மையை இழந்துள்ளது. யமினா கட்சி உறுப்பினர் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து. இந்த அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
பென்னட் தனது அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்து வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைத்துள்ளதாகக் கூறியபோதும், பல்வேறு கட்சிகளை ஒன்றாக இணைக்க முடியாமல் போனபோதும், எட்டுக் கட்சிக் கூட்டணி ஆரம்பத்திலிருந்தே நெருக்கடியில் உள்ளது.
நெதன்யாகு தலைமையிலான எதிர்கட்சியினர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான சட்டமூலத்தை சமர்பிப்பதாக அச்சுறுத்தினர், இருப்பினும் பென்னட் மற்றும் லாபிட் ஆகியோர் இணைந்து, இந்த புதிய சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளனர்.
லாபிட் பென்னட்டின் சாதனையைப் பாராட்டியபோதும், பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸ் அரசியல் வளர்ச்சியில் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.