கம்போடியாவில் உள்ள மெக்கொங் ஆற்றில் உலகின் மிகப்பெரிய நன்னீர் வகை மீன் பிடிக்கப்பட்டுள்ளது.
4 மீட்டர் நீளம் கொண்ட அந்த திருக்கை மீனின் எடை சுமார் 300 கிலோகிராம்களாகும்.
ஜூன் 13ஆம் திகதி வலையின் மூலம் இந்த மீன் பிடிக்கப்பட்டதாக அமெரிக்க- கம்போடிய ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
ஆராய்ச்சியாளர்களின் Wonders of the Mekong எனும் கூட்டுத் திட்டம்வழி ஆற்றோரமாக வாழும் சமூகங்களைப் பராமரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மெக்கொங் ஆற்றில் வாழும் மீன்கள் இவ்வளவு பெரிதாக வளரலாம் என்பது நம்பிக்கை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர், தாய்லந்தில் 2005 ஆம் ஆண்டில் ராட்சத catfish எனும் வகையைச் சேர்ந்த மீன் சிக்கியது.
அதன் எடை 293 கிலோகிராம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1