27.6 C
Jaffna
March 28, 2024
விளையாட்டு

நடுவர் என்பதை மறந்து பந்தை பிடியெடுக்க முயன்ற தர்மசேன: நேற்றைய போட்டியில் சுவாரஸ்யம்!

களத்தில் ஒரு கணம் ஃபீல்டராக மாறி பந்தை பிடிக்க முயன்றார் நடுவர் குமார் தர்மசேன. அந்தக் காட்சி தற்போது இணைய வெளியில் வைரலாகி உள்ளது.

அவுஸ்திரேலிய-, இலங்கை அணிகளிற்கிடையில் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.

மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு, பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 291 ரன்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடிய போது 35வது ஓவரில் அலெக்ஸ் கரி, பந்தை லாஃப்ட் ஷொட் ஆடி லெக் சைடில் விரட்டி இருப்பார். அவர் அடித்த பந்து லெக் சைடில் ஃபீல்டிங் பணியை கவனித்துக் கொண்டிருந்த நடுவர் குமார் தர்மசேனவை நோக்கி செல்லும். அவரும் ஒரு கணம் தான் நடுவர் என்பதை மறந்து, பந்தை கட்ச் பிடிக்கும் நோக்கில் அவர் ஆக்‌ஷனில் இறங்கி இருப்பார். இருந்தும் கடைசி நொடியில் பந்தை கட்ச் பிடிக்காமல் தவிர்த்திருப்பார். பந்தும் அவருக்கு சில அடிகள் முன்னதாக வீழ்ந்திருக்கும். அது தான் இப்போது வைரலாகி உள்ளது.

இலங்கை அணிக்காக 31 டெஸ்ட் மற்றும் 141 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment