சுமார் 7 நாட்களுக்கு பிறகு நேற்று (19) பசறை தனியார் எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது.
ஆனால் சுமார் இரவு 11மணியளவில் பெட்ரோல் தீர்ந்ததையடுத்து, எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பாரிய அமைதியின்மை ஏற்பட்டது.
எனினும் பொலிஸாரின் தலையீட்டினால் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து, பெட்ரோலுக்காக காத்திருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
இன்றைய தினமும் டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக, பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக நீண்ட வரிசை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1