29.5 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

ஜூலை 1 முதல் பலாலி விமான நிலையம் இயங்கும்: யாழில் அறிவித்தார் அமைச்சர் நிமல்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் மீளவும் ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்பதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அத்தோடு புலம்பெயர் தமிழர்கள் தமது தாயக நிலத்துக்கு நேரடியாக விமானமூடாக வருகை தர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னைய நல்லாட்சி அரசின் காலத்தில் பலாலி சர்வதேச விமான நிலைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், கோட்டா அரசு பதவியேற்ற பின்னர் கொரோனா தொற்றின் பின் அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. பலாலி விமான நிலையத்தை இயக்க கோட்டா அரசு ஆர்வம் காட்டாமல் இருந்தது.

எனினும், அரசின் தவறான முகாமையினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா பொருளாதார உதவிகள் மேற்கொள்வதையடுத்து, இந்திய அழுத்தத்தின் பின்னர் மீளவும் பலாலி விமான நிலையம் இயங்க ஆரம்பிக்கவுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி இன்று சிஐடியில் வாக்குமூலம்!

Pagetamil

Leave a Comment