29.7 C
Jaffna
June 28, 2022
சினிமா

நயனின் நாத்தனாரை பார்த்திருக்கிறீர்களா?

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஜூன் 9ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதிக்கு சென்று தரிசனம் மேற்கொண்டுள்ளனர். மேலும் செய்தியாளர்களை சந்தித்து நன்றி கூறினர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது அம்மா மற்றும் தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா தங்களது திருமண பரிசாக விக்னேஷ் சிவனின் தங்கைக்கு 30 பவுன் தங்க நகைகளை அளித்ததாக தகவல்கள் வெளிவந்தது. இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது அம்மா மற்றும் தங்கை மீது அளவற்ற பாசம் கொண்டவராம். அவர்களைப் பார்த்துக் கொள்வது போலவே தன்னையும் பார்த்துக் கொள்வார் என்றே நயன்தாரா அவரை காதலித்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

சினிமா ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி! -இயக்குநர் கொரோனா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்..

divya divya

நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் ஆறுதல்!

divya divya

தளபதி 65 அப்டேட்: நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!