26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

‘நான் சொன்னது தவறு’: பல்டியடித்தார் மின்சாரசபை தலைவர்!

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் சம்பந்தப்பட்ட மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி திட்டம் தொடர்பாக வெள்ளிக்கிழமை (10) கோப் குழு விசாரணையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ மன்னிப்பு கோரியுள்ளார்.

கோப் விசாரணையில், இத்திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் தமக்கு அழுத்தம் கொடுப்பதாக ஜனாதிபதி தமக்கு தெரிவித்ததாக மின்சாரசபை தலைவர் தெரிவித்திருந்தார்.

“எனவே எதிர்பாராத அழுத்தம் மற்றும் உணர்ச்சிகளின் காரணமாக, “மாண்புமிகு பாரதப் பிரதமரால் வலியுறுத்தப்பட்டது) என்ற வார்த்தையை வெளிப்படுத்த நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன், இது முற்றிலும் தவறானது” என்று அவர் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோப் குழுவில் முன்னிலையாகிய மின்சாரசபை தலைவர், இந்திய பிரதமரின் நிர்ப்பந்தத்தால் அதானி குழுமத்திடம் திட்டத்தை ஒப்படைக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும், நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ருவிற்றர் பக்கத்தில் அதனை மறுத்திருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

east tamil

தொடரும் சுற்றிவளைப்பு – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

Pagetamil

Leave a Comment