இந்தியா

விஜய் படங்களை பார்க்க வேண்டாம்: மதுரை ஆதீனம் அறிவிப்பு!

நடிகர் விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என மதுரை ஆதீனம் அறிவித்துள்ளது.

மதுரை பழங்காநத்தம் என்ற பகுதியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் பங்கேற்று பேசிய மதுரை ஆதினம் ‘நடிகர் விஜய் படங்கள் இந்துக்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் அதிகம் இருப்பதால் அவரது படங்களை பார்க்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரமாக கோவில்கள் இருக்கின்றன. இந்து அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என்று மதுரை ஆதினம் பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜயின் திரைப்படத்தையும் பார்க்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மதுரை ஆதீனம், பாரதியார் மட்டும் இப்போது இருந்திருந்தால் செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என பாடியிருப்பார். அந்த அளவிற்கு மதுக்கடைகள் ஆதிக்கம் தற்போது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கோவில்களுக்குள்ளும் அரசியல் புகுந்து விட்டது. ஆன்மிகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்று கூறுகின்றனர். நாங்கள் ஏன் அரசியல் பேசக்கூடாது? ஆதீனங்கள் அரசியல் பேசக் கூடாது என்கிறார்கள், அரசியலை நாங்கள் பேசாமல் யார் பேசுவது, கோவில் சொத்துக்கள் இங்கே தொலைந்து போகின்றன. உண்மையில் சொன்னால் தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரம் கோவில்களுக்குள் தான் இருக்கின்றது. அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை, அரசியல்வாதிகள் கோவிலின் தர்க்கராக வந்து இருந்து கொள்கிறார்கள்.

மக்கள் இந்து அறநிலையத்துறை கோவில் உண்டியலில் காசு போடாதீர்கள். ஏனென்றால் அந்தப் பணம் எதுவும் கோவிலுக்கு செல்வதில்லை. உண்டியல் அங்கு வந்து சேரும் பணமெல்லாம் எங்கேயோ செல்கிறது. திராவிட பூமி என்று சொல்லிக்கொண்டே இறந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். கோவில் நம்மை விட்டுச் சென்றால் நமது சமுதாயமும் நம்மை விட்டு போய்விடும். அறநிலையத்துறை பொல்லாத துறையாக இருக்கின்றது. அதிகாரிகள் யாரும் விபூதி பூசுவது. கோவிலில் என்ன நடக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டும் என்று மதுரை ஆதினம் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அடுத்த 5 வருடங்களிற்கு கட்சியின் எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டேன் என்ற சிறிதரன்

Pagetamil

ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

Pagetamil

“உங்கள் கடிதத்திற்கு நன்றி; நான் கட்டுப்படுகிறேன்”: அரசு பங்களா விவகாரத்தில் ராகுல் காந்தி பதில்

Pagetamil

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு: ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு; நாளை விசாரணை

Pagetamil

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் ஒருமனதாக தேர்வு

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!