Site icon Pagetamil

கணவரின் அதீத பாலியல் வெறி: திருமணமான 2வது நாளிலேயே விவாகரத்து கோரிய மனைவி!

கணவரின் அதீத பாலுணர்வு காரணமாக திருமணமான இரண்டாவது நாளே மனைவி அவரை பிரிந்து சென்றார்.

தற்போது அந்த தம்பதியிடை விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.

வட மாகாணத்திலுள்ள பகுதியொன்றில் பதிவாகியுள்ள இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு-

பெற்றோரின் ஏற்பாட்டில் கடந்த வருடம் 23 வயதான பெண்ணொருவருக்கும், 26 வயதான ஆணொருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடந்த 2 நாட்களில் கணவன் வெளிப்படுத்திய அதீத பாலுணர்வு, மனைவியை மிரட்சியடைய செய்துள்ளது.

திருமணம் நடந்த 2வது நாளே அவர் கணவனை பிரிநதார்.

மாவட்ட நீதிமன்றமொன்றில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். எனினும், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது,

இதையடுத்து வடக்கிலுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றமொன்றில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version