20 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஓவிட்டிகல விதானகே சமந்தவின் மரணத்திற்கு காரணமான பகிடிவதை சம்பவம் தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 7 சந்தேகநபர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை நேற்று (1) பிறப்பித்துள்ளார்.
சமந்த 2002 நவம்பர் 7ஆம் திகதி பகிடிவதையால் இறந்தார்.
இந்த வழக்கில் 17வது பிரதிவாதிக்கு எட்டு வருடங்கள் மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனையும், 10 குற்றப்பத்திரிகைகளில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மற்றுமொரு சந்தேக நபருக்கு மூன்று வருடங்களும் இரண்டு மாதங்களும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
10 குற்றச்சாட்டுக்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நான்கு சந்தேக நபர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஐந்து வருட சிறைத்தண்டனையும் 38,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
மற்றுமொரு சந்தேக நபருக்கு ஐந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் ரூ.6,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
வழக்கின் முதலாம், இரண்டாம், 16, மற்றும் 22ஆவது பிரதிவாதிகள் தலா 500,000 ரூபாவை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.