நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதிரி பகுதியில் உறக்கத்திற்கு சென்ற மூதாட்டியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் இயற்கையான காரணங்களால் மரணித்தாரா அல்லது தாக்கப்பட்டு கொல்லப்பட்டாரா என்பதை கண்டறிய சடலம் உடற்கூறாய்விற்கு உட்படுத்தப்படவுள்ளது.
வதிரி பகுதியில் இன்று இந்த சம்பவம் நடந்தது.
உயிரிழந்த மூதாட்டியை தாக்கிய அயலவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூதாட்டி நேற்று நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அயல்வீட்டுக்காரர் தன்னை தாக்கியதாக அதில் குறிப்பிட்டிருந்தார். தலை உள்ளிட்ட பகுதிகளில் தாக்கப்பட்டுள்ளார்.
அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பொலிசார் முயற்சித்த போது, தனக்கு எந்த பிரச்சனையும் இல்லையென குறிப்பிட்டுவிட்டு, மூதாட்டி வீடு திரும்பினார்.
உறக்கத்திற்கு சென்ற மூதாட்டி இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய சடலம் உடற்கூறாய்விற்கு உட்படுத்தப்படவுள்ளது.
மூதாட்டியின் முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய அயலவர் கைது செய்யப்பட்டுள்ளார்.