25.9 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

மட்டக்களப்பில் ஆழமான கவலைகளால் உருவான கட்சி!

தமிழ் முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சிகள் எல்லாம் ஆளும் கட்சிக்கு ஒரு முகத்தையும் எதிர்கட்சிக்கு ஒரு முகத்தையும் காண்பித்து சமூகத்தை நடுத்தெருவில் விட்டு விட்டு அவர்கள் தேன் நிலவு கொண்டாடுகிறார்கள் என ஸ்ரீலங்கா ஜக்கிய முன்னணியின் தலைவர் சித்திக் மொகமட் சதிக் தெரிவித்தார்.

கல்குடா கொண்டயன்கேணி எனும் இடத்தில் மேற்படி கட்சியினால் அதன் பொதுச் செயலாளர் எம்.ஜ.சல்மான் வஹாப் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இதற்கான தகுந்த பாடம் படிப்பிக்கின்ற நோக்கிலே ஸ்ரீலங்கா ஜக்கிய முன்னணி கட்சியினை நாடளாவிய ரீதியில் வழிநடத்தி வருகின்றேன். நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிராமங்களிலும் பிரதேச சபை உறுப்பினர்களாக இளைஞர்களை உருவாக்க வேண்டும். நாட்டிலுள்ள இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டி நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் ஆணைக்குழுவொன்று அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை நீக்க சுற்றாடல் துறை அமைச்சர் ஹபிஸ் நசிர் அஹமட் கூறியதுபோன்று அவரது பல்கலைக் கழக நண்பர் சவுதியரேபியாவில் எரிபொருள் அமைச்சராக இருந்தால் அவருடன் தொடர்பு கொண்டு எமது நாட்டிற்கு தேவையான எரிபொருளினை பெற்றுக்கொடுக்கும் தார்மீகப் பொறுப்பு அவருக்குள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் கருத்து தெரிவிக்கும்போது,

இன்றைய இலங்கையின் அரசியல் சூழலாக இருந்தாலும் சரி சமூக பொருளாதார நிலமைகளாக இருந்தாலும் சரி ஒரு நெருக்கடியான நிலமையில் இந்த நாடு இருக்கின்றது என்பதை எல்லோரும் புரிந்திருக்கின்றார்கள். ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

நெருக்கடியான சூழ் நிலையில் எம்மால் முடிந்த பங்களிப்பினை நாம் வழங்கவேண்டும் என்பதற்காகவே தனியான இந்த கட்சியினை நாம் ஆரம்பித்திருக்கின்றோம். இது ஒரு பொழுது போக்கிற்காகவோ அல்லது சாதாரண செயற்பாட்டிற்காகவோ அல்ல. ஆழமான கவலையின் அடிப்படையில் இக்கட்சியின் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என்றார்.

இதன்போது கட்சியானது தற்போதைய நாட்டின் நிலவரம் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்,எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

-வாழைச்சேனை நிருபர்-

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment