போதுமான பெரிய பொருளாதார கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தாத வரையில், இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்ட உலக வங்கி, இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதாகவும், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
சில அத்தியாவசிய மருந்துகள், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு தற்காலிக பணப் பரிமாற்றம், பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு பாடசாலை உணவு மற்றும் விவசாயிகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஆதரவாக அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் ஆதாரங்களை தற்போது மீண்டும் உருவாக்கி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.