29.8 C
Jaffna
June 26, 2022
இலங்கை

‘மனிசி வேண்டாமாம்… சீதனம் வேணுமாம்’: மணிவண்ணனை விமர்சித்த சுகாஷ்!

கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை வந்து, கணவன் நீதிமன்றத்திற்கு போய், ‘எனக்கு மனிசி வேண்டாம், ஆனால் சீதனக்காசு மட்டும் வேண்டும்’ என்று கேட்பதை போலிருக்கிறது, மணிவண்ணன் கருத்துக்கள் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க.சுகாஷ்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மணிவண்ணனின் கதைகள் சின்னப் பிள்ளைத்தனமாக உள்ளது. கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை வந்து, கணவன் நீதிமன்றத்திற்கு போகிறார். எனக்கு மனிசி வேண்டாம், ஆனால் சீதனக்காசு மட்டும் வேண்டும் என்றால் எப்படி?

மனைவி விவாகரத்திற்கு போய், எனக்கு கணவன் வேண்டாம், திருமணம் வேண்டாம், ஆனால் கணவனின் பெயரை மட்டும் பாவிக்க வேண்டுமென்றால் எப்படி? அப்படித்தான் மணிண்ணனின் கருத்துக்கள் உள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு முடிவுகளை மதிக்காமல், மத்திய குழு தேவையில்லை, கட்சி தேவையில்லை, புதுக்கட்சி உருவாக்கப் போகிறோம் என அறிக்கைவிட்டு, இவ்வளவு நாளும் கட்சியைப் பற்றி கதைக்காமல் இருந்து விட்டு, கட்சியின் கொள்கையை ஒரு இடத்திலும் வலியுறுத்தாமல் இருந்து விட்டு, தற்போது தமது முகமூடிகள் கழன்றுள்ள நிலையில், எல்லோருமே அவரை கட்சியை விட்டு நீக்கிய முடிவு சரியானது என சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

மாநகரசபையில் ஈ.பி.டி.பியின் துணையுடன் ஆட்சிக்கு வந்து, ஆட்சியை தொடர ஈ.பி.டி.பியின் உதவியை பெற்றதுடன் இவர்கள் யாரென்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

ஆரியகுளத்தை புனரமைத்து விகாரைக்கும், சிங்கள பௌத்த வளர்ச்சிக்கு துணை போனதுடன், அவரிடம் எஞ்சியிருந்த கோவணமும் அவிழ்ந்து விட்டது.

அவரது வெளிநாட்டு பயணங்களும் பிசுபிசுத்து விட்டது. புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களும் அவரை புறக்கணித்து விட்டது. என்ன செய்வதென தெரியாமல் திண்டாடியவர், மீண்டும் ஓடித்திரிய தமிழ் தேசிய முலாத்தை பூச முயற்சிக்கிறார். அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியை விட்டால் வேறு வழியில்லை. அதனால் இவ்வளவு நாளும் மறந்து போயிருந்த கட்சியை கையில் எடுத்துள்ளார்.

அண்மையில் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு நிவாரணம் கேட்கவில்லை. தமிழ் காங்கிரசிலேயே பதவிகேட்டு தொங்கிக் கொண்டுள்ளார்.

அவருக்கு கட்சியை பற்றியோ, தலைமையை பற்றியோ கதைக்க அருகதையில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தாபித்தவர்கள் 4 பேர். கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி, பேராசிரியர் கெனடி ஆகியோரே கட்சியை உருவாக்கினர். கட்சி உருவாக்கப்பட்ட பின்னரே, வேட்பாளராக அவரை கொண்டு வந்து சிலர் அறிமுகப்படுத்தினர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தான் உருவாக்கியதாக மணிவண்ணன் சொல்வது பொய்

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Related posts

மன்னாரில் 18 நாளில் 300 பேருக்கு தொற்று!

Pagetamil

நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனைக்கு ஐ.ம.ச எம்.பிக்கள் ஆதரவு!

Pagetamil

முல்லைத்தீவிலிருந்து காதலனை தேடி இந்தியா சென்ற யுவதி: கடல் வழியாக திரும்பும் போது சிக்கினார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!