29.7 C
Jaffna
June 28, 2022
உலகம் முக்கியச் செய்திகள்

பாடசாலையில் கிண்டல்… பெற்றோர்களின் புறக்கணிப்பு… முகம் தெரியாத நண்பிக்கு அனுப்பிய கடைசி செய்தி: அமெரிக்க பாடசாலைக்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞனின் பின்னணி தகவல்கள்!

வீட்டில் தனது பாட்டி மீது துப்பாக்கிச்கூடு நடத்திவிட்டு, அருகிலிருந்த ஆரம்பப் பாடசாலையில் 19 குழந்தைகளையும், இரண்டு ஆசிரியர்களையும், ஒரு சுட்டுக் கொன்ற அமெரிக்க இளைஞனின் செயல், உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞன் குறித்த பல்வேறு தகவல்களும் வெளியாகியுள்ளன.

சால்வடர் ரொலாண்டோ ராமோஸ் என்ற அந்த 18 வயது இளைஞர் பற்றி அவருடன் பணியாற்றிவர்கள், அவரது பாடசாலையில் படித்தவர், அவர் குடும்பத்துக்கு நெருங்கியவர்கள் எனப் பலரும் பல தகவல்களை சொல்லியுள்ளனர்.

சால்வடர் ரொலாண்டோ ராமோஸ்

ரொலாண்டோ எப்போதுமே தனித்தே இருப்பான். சிறுவயதில் பேசுவதில் இருந்த சிக்கல், பெரிய உதடு காரணமாக பாடசாலையில் சக மாணவர்களால் துன்புறுத்தப்பட்டிருக்கிறான். மேலும், வீட்டிலும் சண்டை, சச்சரவுகள் இருந்துள்ளன. குடும்ப சூழல் காரணமாக நல்ல ஆடைகளை அணிய முடியாமை, பாடசாலையில் இருந்த துன்புறுத்தல் காரணமாகவே பாதியில் படிப்பை கைவிட்டுள்ளான்.

ரொலாண்டோவின் தாய் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர். அதனால் அவருக்கும் ரொலாண்டோவுக்கும் இடையே அதிகமான சண்டை நடந்துள்ளன. வீட்டில் இருவரும் அடிக்கடி கத்திச் சண்டையிட்டு, பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, அவர்கள் வந்து நிலைமையை சரி செய்த சம்பவங்கள் பல நடந்துள்ளன.

பாடசாலை காலத்தில் தலைமுடியை குட்டையாக வெட்டுவதால், ‘மொட்டை’ என்ற சாரப்படவும், ஓரினச்சேர்க்கையாளர் என்றும் அவரை நண்பர்கள் கிண்டலடித்துள்ளனர்.

அவர், மெதுமெதுவாக பாடசாலை செல்வதை குறைத்து, இறுதியில் நிறுத்தி விட்டார். பாடசாலையில் கிண்டலடிக்கப்பட்டதை தொடர்ந்து, தலை முடியை நீளமாக வளர்க்க ஆரம்பித்துள்ளார். கருப்பு ஆடைகளையும், பெரிய இராணுவ சப்பாத்துக்களையும் அணியத் தொடங்கினார்.

கொல்லப்பட்ட சில மாணவர்களும், 2ஆசிரியைகளும்

‘அவர் தனது அம்மாவை ஒரு b***h என்று அழைப்பார். தாயரை வெளியேற்ற விரும்புவதாகச் சொல்வார்… அவர் கத்திக் கொண்டிருப்பார் மற்றும் அவரது அம்மாவிடம் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசுவார்.’ என ராமோஸின் வகுப்புத் தோழி நதியா ரெய்ஸ் கூறினார்:

ராமோஸின் தாயாரின் போதைப்பொருள் பாவனை காரணமாக வீட்டில் சண்டை ஏற்பட்டது. ராமோஸ் தற்போது வசித்த வீடு, அவரது பாட்டிக்கு சொந்தமானது. நேற்று செவ்வாய்க் கிழமை, போதைப்பொருள் பாவனைக்காக ராமோஸின் தாயை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

நேற்று ராமோஸ் முதலில் 66 வயதான பாட்டியின் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த மூதாட்டி ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு சற்று முன்னதாக, பாட்டிக்கும் ராமோஸிற்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் பாடசாலைக்கு சென்று இறுதிப்பரீட்சைக்கு தோற்றி பட்டதாரியாகுமாறு பாட்டி வற்புறுத்தியுள்ளார்.

எனினும், ராமோஸ் அதை மறுத்து சத்தமிட்டு சண்டையிட்டுள்ளார். பின்னரே துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

அவரது நீக்கப்பட்ட இன்ஸ்டகிராம் கணக்கில், ராமோஸ் படுகொலைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு இரண்டு AR15-பாணி துப்பாக்கிகளின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.  அதே நேரத்தில் அவரது டிக்ரொக் பக்கத்தில் உள்ள சுயசரிதை குறிப்பில், ‘நிஜ வாழ்க்கையில் குழந்தைகள் பயப்படுவார்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை விட்டு விலகிய ராமோஸ், உள்ளூர் நிறுவனமொன்றில் பணிபுரிந்தார்.  அவருக்கு ஆக்ரோஷமான நடத்தைகள் இருப்பதாகவும், பெண் ஊழியர்களுக்கு தகாத செய்திகளை அனுப்புவதாகவும் அந்த நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

கடந்த 4 நாட்களாக ராமோஸ் சமூக வலைதளங்களில் துப்பாக்கிகள் பற்றி அதிகமான பதிவுகளைப் பகிர்ந்துள்ளார். இரண்டு துப்பாக்கிகளின் புகைப்படத்தை பகிர்ந்து “மை கன் பிக்ஸ்” என்று பதிவிட்டிருந்தார். 4 ஆண்டுகளுக்கு முன்னரும் சில ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளின் படங்களைப் பகிர்ந்து “இவற்றை வாங்க ஆசைப்படுகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் அவர் பதிந்த சில பதிவுகள் துப்பாக்கிச் சூடுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதில், ஒரு பெண்ணுக்கு அனுப்பிய மெசேஜில், “நான் ஒரு சின்ன ரகசியத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்று கூறி, வாயை மூடியிருக்கும் ஸ்மைலி இமோஜியை பகிர்ந்திருந்தார்.

பின்னர், “நான் அதை செய்யப்போகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு அந்தப் பெண், “என்ன செய்யப்போகிறாய்?” எனக் கேட்டிருக்கிறார். அதற்கு  “நான் 11 மணிக்கு முன்னர் சொல்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். கடைசியாக காலை 9.16 மணிக்கு பதிவு செய்துள்ளார். 11.32 மணிக்கு பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

செவ்வாய் கிழமை துப்பாக்கிச்சூட்டிற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, ராமோஸ் தனது நண்பருக்கு AR மற்றும் 5.56 சுற்றுகள் கொண்ட ஒரு துப்பாக்கி மகசீன் படத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது.

செப்டம்பரில் இயற்றப்பட்ட புதிய டெக்ஸான் சட்டத்தின்படி, 18-21 வயதுடையவர்கள், குடும்ப வன்முறை, பின்தொடர்தல், விபச்சாரம் அல்லது பாலியல் கடத்தல் போன்ற ஆபத்தில் இருந்தால், அவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவு இருந்தால் துப்பாக்கிகளை வாங்கலாம்.

கைத்துப்பாக்கிக்கான அனுமதி தேவையையும் சட்டம் நீக்கியது. டெக்சாஸில் உரிமம் இல்லாமல் துப்பாக்கிகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டன.

ராமோஸ் பயன்படுத்திய துப்பாக்கியை தனது 18வது பிறந்தநாளில் வாங்கியுள்ளார். அமெரிக்காவில் 18 வயது நிரம்பிய நபர்கள் யாராக இருந்தாலும் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம். ஆயுதங்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

Related posts

நேற்று முதல் இந்திய கடனை பாவிக்க ஆரம்பித்து விட்டோம்: புதுவருடத்திற்குள் நிலைமை சீராகும்: அமைச்சர் பசில்!

Pagetamil

மஹிந்த, நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 16 பேர் வெளிநாடு செல்ல தடை!

Pagetamil

உலகில் முதலாவது சந்தர்ப்பம்: அதிக நோயெதிர்ப்பு சக்தியை கொண்ட கழுதைப் புலிகளிற்கும் கொரோனா!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!