29.8 C
Jaffna
June 26, 2022
மலையகம்

நிர்வாணமாக்கி தாக்கியவர்களிற்கு விளக்கமறியல்!

மஸ்கெலியா நகரில் கூலித் தொழிலில் ஈடுபடும் நபர் ஒருவரை  நிர்வாணமாக்கி தாக்குதல் நடத்தியவர்களை இன்று (25) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதில் ஒரு சந்தேகநபர் நோயில் பீடிக்கப்பட்டுள்ளதாக அவரத மனைவியால் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் காரணங்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து,அவரை 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதில் தாக்குதலுக்கு இலக்கான மஸ்கெலியா- சோளாங்கந்த தோட்டத்தைச் சேர்ந்த நபர், மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மஸ்கெலியா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வரும் சந்தேகநபர்கள். அவர்களின் வர்த்தக நிலையத்தில் கோதுமை மா இன்மையால், வேறொரு கடையிலிருந்து மா மூடை ஒன்றை கொள்வனவு செய்து வருமாறு தெரிவித்து, 5,720 ரூபாயை கூலித் தொழிலாளியிடம் இந்த மாதம் 14ஆம் திகதி வழங்கியுள்ளனர்.

எனினும் அந்த பணம் காணாமல் போனதாகவும் இதனால் சில நாள்களாக அக்கூலித் தொழிலாளி அந்த வர்த்தக நிலையத்துக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அந்த கூலித் தொழிலாளி மஸ்கெலியா நகருக்கு வந்த போது, வர்த்தக நிலைய உரிமையாளரும் மேலும் சிலரும் அந்த நபரை கடைக்குள் இழுத்துச் சென்று, ஆடைகளை களைந்து கடுமையாக தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கானவர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் முச்சக்கர வண்டியில் அரை நிர்வாணமாக கொண்டு சென்று இறக்கி விடப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவ வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்ட நபர் தலைமறைவாகியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மவுஸாகலை நீர்தேக்கத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி அணைக்கட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

Pagetamil

அட்டனில் இரண்டாம் கட்ட தடுப்பூசி

Pagetamil

அரசியல் இலாபம் தேட பலம் அற்ற தலைவன் அல்ல நான்: ஜீவன் தொண்டமான்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!