இலங்கை

முச்சக்கர வண்டி கட்டணங்கள் உயர்ந்தன!

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.

அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் இது தொடர்பில் தெரிவிக்கையில், முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக அதிகரிக்கப்படும் அதே வேளையில் மேலதிகமான ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 80 ரூபா கட்டணம் அறவிடப்படும் என்றார்.

பயணக் கட்டண உயர்வு போதுமானதாக இல்லாவிட்டாலும், பயணிகளைக் கருத்தில் கொண்டு, தங்கள் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் அவர்கள் ஒரு முடிவை எடுத்ததாக ஜெயருக் கூறினார்.

நிலைமையை அவதானிப்பதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேவையான முடிவுகளை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பொதுமக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

Pagetamil

30 முன்னாள்களிற்கு உயர்பாதுகாப்பு!

Pagetamil

கிளிநொச்சி சந்தை மூடப்பட்டது: வெளிப்பகுதிகளில் வர்த்தகம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!