29.7 C
Jaffna
June 28, 2022
முக்கியச் செய்திகள் விளையாட்டு

2வது டெஸ்ட்: இலங்கை அபார ஆரம்பம்: மளமளவென சரிந்த பங்களாதேஷ் முன்வரிசை!

மிர்பூரில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

அந்த அணியின் தொடக்க விக்கெட்டுக்கள் சீட்டுக்கட்டு போல சரிந்துள்ளன.

10 ஓவர்களில் 31 ஓட்டங்களை பெற்ற நிலையில் 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

கசுன் ராஜித 3 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக, இரு அணிகளும் இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளன.

லசித் எம்புல்தெனிய மற்றும் காயம் அடைந்த விஷ்வா பெர்னாண்டோவுக்குப் பதிலாக பிரவீன் ஜெயவிக்ரம மற்றும் கசுன் ராஜித ஆகியோர் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் அணியில் காயமடைந்த நயீம் ஹசன் மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோருக்குப் பதிலாக மொசாடெக் ஹொசைன் மற்றும் எபடோட் ஹொசைன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் சட்டோகிராமில் நடந்த தொடரின் முதலாவது டெஸ்ட் சமநிலையில் முடிந்தது.

அணி விபரம்-

இலங்கை: 1 ஓஷத பெர்னாண்டோ, 2 திமுத் கருணாரத்னே (கப்டன்), 3 குசல் மெண்டிஸ், 4 ஏஞ்சலோ மத்யூஸ், 5 தனஞ்சய டி சில்வா, 6 தினேஷ் சண்டிமால், 7 நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் கீப்பர்), 8 ரமேஷ் மெண்டிஸ், 9 பிரவீன் ஜெயவிக்ரம, 9 பிரவீன் ஜெயவிக்ரம, 10 , அசித பெர்னாண்டோ, 11 கசுன் ராஜித

பங்களாதேஷ்: 1 தமிம் இக்பால், 2 மஹ்முதுல் ஹசன் ஜாய், 3 நஜ்முல் ஹொசைன் சாண்டோ, 4 மொமினுல் ஹக் (கப்டன்), 5 முஷ்பிகுர் ரஹீம், 6 லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), 7 ஷாகிப் அல் ஹசன், 8 மொசாடெக் ஹொசைன், 9 தைஜுல் இஸ்லாம், 9 தைஜுல்லெட் அகமது, 11 எபடோட் ஹொசைன்

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

துறைமுக ஆணைக்குழு சட்டமூலத்தின் உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

Russia-Ukraine crisis: 26 ஆம் நாள்: உக்ரைனில் அமோனியா கசிவு!

Pagetamil

ஒரு மாதத்திற்கு மேல் அமுலில் இருந்த ஊரடங்கு நீக்கப்பட்டது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!