30.7 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ் இன்று (23) மாலை தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை விட்டு விலகுவதாக செயலாளர் தமக்கு அறிவித்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.

மே 9ஆம் திகதி பொதுஜன பெரமுன ஆதரவு குண்டர்களின் தாக்குதல்களை தடுக்க வேண்டாமென மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிற்கு அறிவுறுத்தியதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து இன்று சிஐடியில் வாக்குமூலம் அளித்திருந்தார்.

அத்துடன், பொலிசாருடனான கலந்துரையாடலுக்கு பிரதம நீதியரசருக்கு நேரடியாக கடிதம் எழுதி சர்ச்சையில் சிக்கியிருந்தார். இந்த விடயத்தில் சட்டமா அதிபரால் எச்சரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment