32.3 C
Jaffna
April 28, 2024
இலங்கை

நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அரசில் இணைய தயார்: சம்பிக்க!

தாம் முன்வைத்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்றும் பட்சத்தில், சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்க தமது அணி தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்
ஒரு இடைக்கால அரசாங்கம்-2015 இல் நிறுவப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தைப் போன்றது, அது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் செயல்படும்-2015ல் 100 நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்தியதைப் போன்றே ஒரு அரசாங்கம் அமைய வேண்டும் என்றார்.

எவ்வாறாயினும், தற்போது இருக்கும் அரசாங்கம் இந்த வகையில் செயற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தினார். மற்றும் தெளிவான காலக்கெடு, செயல் திட்டம் மற்றும் கலைக்கப்படும் காலம் எல்லை ஆகியவை இல்லை என்றார்.

ஜனாதிபதி தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

ஜூன் மாதம் பாராளுமன்றம் கூடும் போது அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவை அமைச்சரவை தீர்மானமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.

காவல்துறை, அரச துறை மற்றும் தேசிய தேர்தல் ஆணையம் ஆகியவை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி, பிரதமர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தாலும் ஏனைய நாடுகளில் குடியுரிமை வைத்திருக்கும் நபர்கள் இலங்கையில் பதவி வகிக்க அனுமதிக்கக் கூடாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்திற்குள் அவர்கள் கடமைகளை நிறைவேற்றுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு உதவிகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து விசாரிப்பதற்காக பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நடவடிக்கைகளுக்காக இந்த உதவிகள் வழங்கப்படக் கூடாது என்றும், இது நடக்காமல் இருக்க பிரதமர் தலையிட்டு உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Pagetamil

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Pagetamil

தென்கொரியாவில் தஞ்சமா?: மைத்திரி மறுப்பு!

Pagetamil

Leave a Comment