நடிகை பிரணிதா கர்ப்பமாக இருப்பதை சமீபத்தில் அறிவித்ததுடன், வளைகாப்பு நிகழ்ச்சி படங்களையும் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் மேலும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சூர்யா நடித்த ’மாஸ்’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா. இவர் கடந்த ஆண்டு பிரஜித் என்ற தொழிலதிபரை திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் கர்ப்பமானார். தனது கணவரின் 34வது பிறந்த நாளில், தான் கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களுக்கு அவர் அறிவித்தார் .
சமீபத்தில் பிரணிதாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்த நிலையில் அவை வைரலானது.
இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் கர்ப்பமாக இருக்கும் பிரணிதாவுக்கு அவரது கணவர் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
காதல் என்ற ஒரே உணர்வு மட்டுமே இந்த உலகில் நிரந்தரமானது என்ற கப்ஷனுடன் அவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.




