29.7 C
Jaffna
June 28, 2022
உலகம் முக்கியச் செய்திகள்

போர்க்குற்றம் சுமத்தப்பட்ட ரஷ்ய படைவீரருக்கு ஆயுள்தண்டனை: உக்ரைன் நீதிமன்றம் தீர்ப்பு!

ரஷ்ய இராணுவத்தில் 21 வயதான சார்ஜென்ட் வாடிம் ஷிஷிமரினீற்கு  உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆரம்ப கட்டத்தில் போர்க்குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக அவர் மீது உக்ரைன் குற்றம்சாட்டியது.

ரஷ்யா – உக்ரைனிற்கிடையிலான தற்போதைய நெருக்கடியில் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

உக்ரைனின் சுமி பகுதியில் 62 வயதான ஒலெக்சாண்டர் ஷெலிபோவைக் கொன்ற வழக்கில் ஷிஷிமரின் ஆயுள் தண்டனை விதிக்க நீதிபதி முடிவு செய்தார். போர் விதிகளை பொருட்படுத்தாமல் ரஷ்ய ராணுவம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்பதை நிரூபிக்க உக்ரைனுக்கு இந்த விசாரணை ஒரு முக்கிய வாய்ப்பாக உருவாகியுள்ளது.

வழக்கை விசாரித்த கீவ், சோலோமியான்ஸ்கி மாவட்ட நீதிமன்ற நீதிபதி Serhii Ahafonov, இன்று (23) தனது தீர்ப்பை அறிவித்தார். ஷிஷிமரின் வருத்தம் தெரிவித்தாலும், அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையில் தயக்கம் இல்லை என்று கூறினார்.

தீர்ப்புக்குப் பிறகு, உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனிடிக்டோவா, தன்னிடம் இதேபோன்ற 40 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், அவை அனைத்தும் எதிர்காலத்தில் விசாரணைக்கு வரும் என்றும் கூறினார். உக்ரைன் முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களை அதிகாரிகள் பதிவு செய்திருப்பதால் இது ஒரு ஆரம்பம் என்று அவர் மேலும் கூறினார்.

சுமி பிராந்தியத்தின் சுபாகிவ்கா கிராமத்தில் வசிக்கும் 62 வயதான ஒலெக்சாண்டர் ஷெலிபோவ் என்பவரை பெப்ரவரி 28ஆம் திகதி சுட்டுக் கொன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உக்ரேனிய ஆயுதப் படைகள் ஒரு ரஷ்ய தொடரணியை தாக்கியழித்த போது இந்த சம்பவம் நடந்தது.

ஷிஷிமரினும், மற்ற நான்கு ரஷ்ய வீரர்களும் தப்பிச் செல்லும் போது ஒரு தனியார் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அதை கைப்பற்றினர். தப்பிச் செல்லும் போது அவர்களின் கார் சக்கரங்கள் பஞ்சராகியது. காரில் கிராமத்திற்குள் சென்றனர்.

அப்போது 62 வயதான ஒலெக்சாண்டர் ஷெலிபோவ் என்ற உக்ரைன குடிமகன் தொலைபேசியில் பேசுவதைக் கண்டனர். தப்பி வந்த ரஷ்ய படையினர் அங்கு நிற்கிறார்கள் என்பதை உக்ரைனிய இராணுவத்திற்கு அவர் தெரிவித்துள்ளார். தகவல் சச்வதை தடுக்க அந்த நபரைக் கொல்லுமாறு ஷிஷிமரின் உத்தரவிட்டார். கார் கண்ணாடி வழியாக, அவரே முதியவரின் தலையில்  சுட்டார். முதியவர் தனது வீட்டில் இருந்து சில டஜன் மீட்டர் தொலைவில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

குற்றம் சாட்டப்பட்ட வாடிம் ஷிஷிமரின் சாட்சியத்தின்படி, மிதிவண்டியில் சென்ற பொதுமக்களைக் கொல்லுமாறு அவருக்கு கட்டளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முதியவரை சுடும்படி மற்றொரு ரஷ்ய சிப்பாய்க்கு அவர் உத்தரவிட்டபோது அவர் மறுத்துள்ளார். அந்த சிப்பாயை ஷிஷிமரின் அச்சுறுத்தினார். மற்றொரு சிப்பாயான  இவான் மால்டிசோவ் இதை உறுதிசெய்து வாக்குமூலமளித்துள்ளார்.

நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஷிஷிமரின் வழக்கறிஞர் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஷிஷிமரின் குற்றத்தை ஒப்புக்கொண்டார், என்றாலும், அவர் வற்புறுத்தப்பட்டமைக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த கொலைக்காக ஷிஷிமரின் வருத்தம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவரின் மனைவியிடம் மன்னிப்பும் கோரினார்.

“அவருக்காக நான் மிகவும் வருந்துகிறேன், ஆனால் அது போன்ற ஒரு குற்றத்திற்காக – என்னால் அவரை மன்னிக்க முடியாது. எனினும், அசோவ்ஸ்டாலில் சரணடைந்துள்ள உக்ரைன் இராணுவத்தினருடனான கைதிகள் பரிமாற்றத்தில் அவர் பரிமாறப்படுவதில் எந்த பிரச்சனையுமில்லை” என்று உயிரிழந்தவரின் மனைவி கேதரினா ஷெலிபோவா ஊடகங்களிடம் கூறினார்.

இந்த வழக்கு வெறும் 10 நாட்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Related posts

அவுஸ்ரேலியாவில் அல்கஹால் இல்லாத பீர், ஒயின் மதுபானம் அறிமுகம்!

divya divya

கோட்டாவின் பாவனையில் ஹெலிகொப்டர்: நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

Pagetamil

பல்கனியில் காதலனுடன் உல்லாசமாக இருந்த போது அரைநிர்வாணமாக தவறி கீழே விழுந்த யுவதி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!