29.7 C
Jaffna
June 28, 2022
விளையாட்டு

பங்களாதேஷிற்கு எதிரான 2வது டெஸ்ட்: குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்!

பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது டெஸ்டில் ஆடி வரும் இலங்கை வீரர் குசல் மென்டிஸ் நெஞ்சு வலியால் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல் நாள் மதிய உணவுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார்.

23 வது ஓவரில், மருத்துவ ஊழியர்களின் உதவிக்கு முன், குசல் மைதானத்தில் படுத்திருந்தபோது, சற்று அசௌகரியமாக காணப்பட்டார். பின்னர், மார்பைப் பிடித்துக்கொண்டு களத்தை விட்டு வெளியேறினார். 

பங்களாதேஷ் மருத்துவர் மன்சூர் ஹொசைன் சௌத்ரி, குசலின் நிலையை “சரியான நோயறிதல் மற்றும் சிறந்த மேலாண்மை” க்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்.

சௌத்ரியின் கூற்றுப்படி, குசல் நீரிழப்பினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இரைப்பை அழற்சி ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம் என்றும் அவர் சந்தேகிக்கிறார்.

குசல் எவ்வளவு காலம் மருத்துவமனையில் இருப்பார் என்பதும், டாக்கா டெஸ்டில் அவர் பங்கேற்பது குறித்தும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அரை சதமும், இரண்டாவது இன்னிங்சில்  48 ஓட்டங்களும் எடுத்தார். இலங்கை இந்த போட்டியை சமன் செய்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

குளிர்பானத்தை ஒதுக்கி விட்டு தண்ணீர் அருந்த வலியுறுத்திய ரொனால்டோ!

Pagetamil

தேசிய விளையாட்டு கவுன்சில் பதவிவிலகியது!

Pagetamil

மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான்: உண்மையை ஒப்புக்கொண்ட ஜடேஜா

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!