29.7 C
Jaffna
June 28, 2022
உலகம் முக்கியச் செய்திகள்

சீன விஸ்தரிப்பிற்கு சவால்: 13 நாடுகள் கூட்டணியில் புதிய ஆசிய – பசுபிக் வர்த்தக முயற்சி: அமெரிக்கா அறிவிப்பு!

அமெரிக்கா தலைமையிலான ஆசிய-பசிபிக் வர்த்தக முயற்சியில் 13 நாடுகள் இணைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் திங்கள்கிழமை (23) தெரிவித்தார். பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு விரிவாக்கத்தை தடுத்து நிறுத்த இந்த கூட்டணி அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

இந்தோ-பசிபிக் பொருளியல் கட்டமைப்பு (Indo-Pacific Economic Framework for Prosperity – IPEF) என அதன் பெயர் அறிக்கபப்ப்டுள்ளது.

வட்டாரத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி பொருளாதார போட்டித்தன்மையை உறுதிசெய்வது தொடர்பிலான சவால்களைக் கையாள்வது அமைப்பின் நோக்கம்.

அமெரிக்கா தலைமையிலான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் ‘ஆரம்ப பங்காளிகளாக’ இருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது:

அவுஸ்திரேலியா, புருனே, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகியன புதிய கூட்டணியில் இணைந்துள்ளன.

பிடென் கிழக்கு ஆசியப் பயணத்தை ஆரம்பித்து, தென் கொரியாவுக்குச் சென்றார், பின்னர் செவ்வாய்க்கிழமை (மே 24) நடைபெறவிருக்கும் நான்கு நாடுகளின் குவாட் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பானுக்கு வந்தார்.

டோக்கியோவில் குவாட் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, ஜப்பானிய பிரதமர் கிஷிடா ஃபுமியோ முன்னிலையில் ஜப்பானிய தலைநகரில் இந்திய-பசிபிக் பொருளாதார கட்டமைப்பை (ஐபிஇஎஃப்) பிடென் தொடங்கினார்.

ஜப்பானிய பிரதமருடன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பிடென், “அமெரிக்காவும் ஜப்பானும் மற்ற 11 நாடுகளுடன் இணைந்து செழுமைக்கான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பைத் தொடங்கும்” என்றார்.

பிடென் மேலும் கூறினார், “இந்த கட்டமைப்பானது 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதார போட்டித்தன்மையை உறுதி செய்வதற்கு மிகவும் முக்கியமான சவால்களில் பிராந்தியத்தில் உள்ள எங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அர்ப்பணிப்பாகும்”.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கார்த்திகை தீபத்தினால் களேபரமான முல்லைத்தீவு இராணுவம்: மத நிகழ்விற்கும் தமிழர்களிற்கு கட்டுப்பாடா என விசனம்!

Pagetamil

நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு!

Pagetamil

‘புதிய பாகிஸ்தான் அல்ல நீங்கள் பிரதமராக இல்லாத பாகிஸ்தானே சிறப்பாக இருந்தது’: இம்ரானின் முன்னாள் மனைவி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!