அவுஸ்திரேலியாவில் இன்று (21) பொதுத் தேர்தல் நடக்கிறது.
அடுத்த மூன்றாண்டுகளுக்கு நாட்டை வழிநடத்தவிருக்கும் பிரதமரை மக்கள் தெரிவு செய்யவிருக்கின்றனர்.
பிரதமர் ஸ்கொட் மொரிசனுக்கும், எதிர்த்தரப்புத் தலைவர் அன்டனி ஆல்பனீஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
ஆளும் கன்சர்வேட்டிவ் கூட்டணியைவிட எதிர்த்தரப்புத் தொழிற்கட்சி சற்று முன்னிலை வகிப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
இருப்பினும் தம்மால் வெற்றி பெற முடியும் என்று மொரிசன் தொடர்ந்து கூறிவருகிறார்.
அவுஸ்திரேலிய நாடாளுமன்ற மக்களவையின் மொத்த இடங்கள் 151. அவற்றில் 76 இடங்களைப் பிடிக்கும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும்.
பிரதமர் மொரிசனின் கன்சர்வேட்டிவ் கூட்டணி 2013ஆம் ஆண்டு முதல் பொறுப்பில் இருக்கிறது. நான்காம் தவணைக்கு மேலும் மூன்றாண்டு ஆட்சி செய்யும் வாய்ப்பைப் பெற அந்தக் கூட்டணி முயல்கிறது..