ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நிமால் சிறிபால டி சில்வா அமைச்சர் பதவியேற்றுள்ள நிலையில், மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, ஜகத் புஸ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.மஹிந்த அமரவீர அமைச்சரவை அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
எஞ்சிய 4 பேரில் மூவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்த போதிலும், பதவிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கவில்லை என அறிவித்துள்ளது. எனினும், அதன் எம்.பிக்கள் அமைச்சு பதவிக்காக தாவிக் கொண்டிருக்கிறார்கள்.