25.7 C
Jaffna
January 31, 2023
இலங்கை

‘மஹிந்த 2 முறை ஜனாதிபதியாக இருந்ததுடன் ஓய்வுபெற்றிருக்க வேண்டும்; பேராசைப்பட்டால் துன்பமே’: நாடாளுமன்றத்தில் அண்ணன் சமல் சாட்டை!

மகிந்த ராஜபக்ச தனது இரண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஓய்வுபெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படிச் செய்திருந்தால் இன்று ஏற்பட்டுள்ள துன்பத்தை அனுபவித்திருக்க வேண்டியதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ஷ இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியல் செய்தால் விட்டுக்கொடுப்பது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும் என்றும், பதவிகளுக்கு பேராசை கொண்டால் இதுபோன்ற துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.

சரியான நேரத்தில் பதவிகளில் இருந்து வெளியேறுவது முக்கியம் என்றும் கூறினார்.

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே சமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச சுமார் 50 வருடங்களாக நாட்டிற்காக பெரும் சேவையை ஆற்றியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்கள் சுமார் 90 வருடங்கள் நாட்டுக்காக சேவையாற்றியதாகவும், அவர்களின் நேர்மையான அரசியலின் காரணமாக ராஜபக்சக்கள் இன்றும் மக்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், 2015 ஆம் ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க இன்று ஒரு ஆசனத்தில் பிரதமராகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னரே அனைத்து வன்முறைகளும் நடந்ததாகவும், தவறான அறிவுறுத்தல்களே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.

அப்போது சில தூண்டுதல்கள் நடந்ததாகவும் அவர் கூறினார்.

பொறுமையின்மையால் இவை நடந்ததாகவும், அனைத்து சம்பவங்களுக்கும் இங்குள்ள அனைவரும் பொறுப்பு என்றும் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் ஏன் தடுக்கவில்லை என்பதும், ஏன் அப்படி உத்தரவு பிறப்பிக்கவில்லை என்பதும் மர்மமாக உள்ளது என்றார்.

இந்தப் போராட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பி.யும், முன்னிலை சோசலிசக் கட்சியும் இருப்பதாகவும், இது யாருக்கும் ரகசியம் அல்ல என்றும் அவர் கூறினார்.

பொருளாதார வீழ்ச்சிக்கு அதிகாரிகளும் காரணம் எனவும், திரு.பி.பி.ஜயசுந்தர பொருளாதார ஆலோசகராக கடமையாற்றிய காலப்பகுதியில் எதிர்மறையான பொருளாதாரமும் கடன் பொருளாதாரமும் உருவானதாகவும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

ஆனோல்ட் முதல்வராக இருந்த போது சட்டவிரோதமாக சொந்த வீடு மட்டுமே கட்டினார்; எனது பெயர் இருந்ததால் கல்வெட்டையும் அகற்ற முயற்சி: மணிவண்ணன் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

Pagetamil

மாவை சேனாதிராசாவிற்கு அடுத்ததாக சிறிதரன் கட்சியை விட்டு நீக்கப்படுவார்; கிளிநொச்சியில் சந்திரகுமாருடன் சுமந்திரன் கூட்டணியமைப்பார்: பா.கஜதீபன்!

Pagetamil

மனித உரிமைகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

புகையிரத விபத்தில் கிளிநொச்சி ஊடகவியலாளர் பலி

Pagetamil

மணிவண்ணன் முதல்வராக இருந்த போது டயலொக் நிறுவனத்துடன் இரகசிய ஒப்பந்தம்: ஆனோல்ட் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!