29.7 C
Jaffna
April 18, 2024
முக்கியச் செய்திகள்

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்: உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி!

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழின படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இறுதி யுத்தத்தில் தனது ஒரு கையினை இழந்து பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து ஏனைய உறவுகளும் தமது உறவுகளுக்கான சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்த வேளையிலே அந்த மக்கள் உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கியது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பல்வேறு தரப்பினராலும் வழங்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையையும், கிழக்கையும் தமிழர்கள் இழந்தது சம்பந்தனின் அரசியலாலேயே: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி

Pagetamil

இஸ்ரேலுக்குள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: பதிலடியை ஆரம்பித்தது ஈரான்!

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளர்: தென்னிலங்கை சக்திகளின் சதியா?

Pagetamil

பொதுவேட்பாளர் இவர்தான்: யாழில் விக்னேஸ்வரனின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி முடிவு!

Pagetamil

Leave a Comment