27.5 C
Jaffna
August 9, 2022
இலங்கை

மே 9 குண்டர்படை தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மே மாதம் 9 ஆம் திகதி அலரிமாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடலிலும் அமைதி வழியில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலை தூண்டியமை தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்யவும், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 பேரை கைது செய்யவும் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு நேற்று வழங்கிய பணிப்புரைக்கு அமைய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோ, மஹிந்த கஹந்தகம மற்றும் டான் பிரியசாத்உள்ளிட்டவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் சுருக்கமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

உள்நாட்டு பொறிமுறையை செயற்படுத்துகிறோம்: அடம்பிடிக்கும் அரசு!

Pagetamil

போராட்டக்காரர்களிற்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Pagetamil

பேராசிரியர் பாலகுமாருக்கு மருத்துவ பீடத்தில் இறுதி மரியாதை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!